பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்! அவரது சினிமா வெற்றி பயணத்தின் ஒரு பார்வை!
இன்று ஜி.வி.பிரகாஷ் குமார் ஒரு பாடலை தமிழுக்காக வெளியிட உள்ளார்.!!!

தற்போது தமிழில் வெகு பிஸியாக நடித்து வரும் நடிகர் ஜி. வி. பிரகாஷ்.இவர் குறுகிய காலத்தில் 50 திற்கு அதிகமான படங்களுக்கு இசை அமைத்து திரையுலகில் நல்ல வரவேற்பை பெற்றவர்.அவர் நடிப்பில் அடுத்ததாக அடங்காதே, 100%காதல், 4ஜி, சர்வம் தாளமயம், ஜெயில் என படங்கள் வரிசையாக ரிலீஸாக காத்திருக்கிறது.
இவர் நான் ராஜாவாகப் போகிறேன், டார்லிங், பென்சில், திரிஷா இல்லைனா நயன்தாரா ஆகிய திரைப்படங்களிலும் காதநாயகனாக நடித்து ஹிட் கொடுத்துள்ளார். இவர் இசை அமைப்பாளர் மற்றும் நடிகர் மட்டுமின்று அவ்வபோது சமூக கருத்துகள் கூறி மக்கள் மனதை வென்றவர். முன்னதாக தூத்துக்குடி ஸ்ட்ரைக் மற்றும் நீட் தேர்வு குறித்தும் அவ்வபோது கருத்துகள் வெளியிட்டார் என்பது குறிபிடத்தக்கது.
இவர் அண்மையில் அனைவரும் தங்களது கருத்துக்களை தாய்மொழியில் பதிவிடுங்கள் என கூறி தனது கையெழுத்தை தமிழில் பதிவிட்டிருந்தார். இவர் இன்று மாலை 6 மணிக்கு தமிழை ஏற்றிடுவோம் என்ற பாடலை வெளியிட உள்ளார்.
சங்கம் வைத்து பல்லாயிரம் ஆண்டுகள் மொழி வளர்த்த என் முன்னோர்களின் வழி நின்று
“தமிழ் மொழியின் ஏற்றத்திற்கு”
ஐயா சகாயம்.இஆப., அவர்களது வரிகளில் என் சிறு பங்களிப்பாக இசையமைத்துள்ள பாடல் #தமிழைஏற்றிடுவோம் #
— G.V.Prakash Kumar (@gvprakash)