சினிமா

வாவ்.. ஜி.வி பிரகாஷ் - சைந்தவியின் அழகிய மகளின் பெயர் இதுதானா? ரகசியத்தை போட்டுடைத்த பிக்பாஸ் பிரபலம்!

Summary:

Gv prakash daughter name is anvi

தமிழ்சினிமாவில் இசையால் ஏராளமான ரசிகர்களை தன்பக்கம் கட்டி இழுத்தவர் ஜிவி பிரகாஷ். இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் ஏராளமான பாடல்களை பாடியுள்ளார். 
அதனை தொடர்ந்து கதாநாயகனாக களமிறங்கிய ஜிவி பிரகாஷ் டார்லிங், பென்சில், திரிஷா இல்லனா நயன்தாரா, கடவுள் இருக்கான் குமாரு, எனக்கு இன்னொரு பேர் இருக்கு, வாட்ச்மேன், குப்பத்து ராஜா, நாச்சியார்,சிவப்பு மஞ்சள் பச்சை ஆகிய படங்களில் நடித்துள்ளார். 

இந்நிலையில், ஜி.வி பிரகாஷ், பிரபல பின்னணி பாடகி சைந்தவியை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.  திருமணம் முடிந்து ஏறக்குறைய 7வருடங்கள் ஆகியும் இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் சமீபத்தில் அவர்களுக்கு  அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தைக்கு அவர்கள் அன்வி என்று பெயர் வைத்துள்ளனர். 

இந்நிலையில் நடிகரும், பிக்பாஸ் பிரபலமுமான கணேஷ் வெங்கட்ராமன் தனது சமூகவலைதள பக்கத்தில்,  தனது மனைவி, மகள் மற்றும் சைந்தவியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, ஊரடங்கு முடிந்த பின்னர் இளவரசி அன்வியைக் காண கண்டிப்பாக நாங்கள் வருவோம் என்று தெரிவித்து, அவர்களது அன்பை பகிர்ந்துள்ளார். 


Advertisement