நேற்றைய சென்னை ஆட்டத்தை பார்க்க மைதானத்திற்கு வந்த பிரபல தமிழ் நடிகர்கள்! யார் தெரியுமா?

நேற்றைய சென்னை ஆட்டத்தை பார்க்க மைதானத்திற்கு வந்த பிரபல தமிழ் நடிகர்கள்! யார் தெரியுமா?


GV prakash and sathish watched yesterday IPL match

ஐபில் போட்டியின் 12 வது சீசன் மிகவும் விறுவிறுப்பாக நடந்தவருகிறது. 41 போட்டிகள் இதுவரை முடிந்துள்ள நிலையில் புள்ளி பட்டியலில் முதல் இடம் பிடித்து ஏறக்குறைய அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டது சென்னை அணி. சென்னை அணிக்கு அடுத்து டெல்லி அணி இரண்ட்டம் இடத்தில் உள்ளது.

சென்னை, கைதராபாத் அணிகள் இடையே நடைபெற்ற நேற்றைய ஆட்டத்தில் சென்னை அணி கடைசி ஓவரில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. முதலில் பேட் செய்த கைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 175 ரன் எடுத்திருந்தது. 176 என்ற இலக்குடன் விளையாடிய சென்னை அணி, வாட்சனின் அதிரடியால் வெற்றிபெற்றது.

IPL 2019

பொதுவாக ஐபில் அணிகளில் சென்னை அணிக்கு அதிக ரசிகர்கள் இருப்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். சாதாரண ரசிகர்களையும் தாண்டி சினிமா பிரபலங்கள் கூட சென்னை அணிக்கு தீவிர ரசிகர்கலாக உள்ளனர். இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற நேற்றைய ஆட்டத்தை பார்க்க பிரபல நடிகரும், இசை அமைப்பாளருமான GV பிரகாஷ், மற்றும் நகைச்சுவை நடிகர் சதிஷ் இருவரும் மைதானத்திற்கு வந்திருந்தனர்.

சென்னை அணியின் அதிரடி ஆட்டத்தின் போது இருவரும் மிகவும் உற்சாகத்துடன் எழுத்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 

IPL 2019