புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
திருநங்கையாக மாறிய ஜி. பி. முத்து.! வைரலாகும் புகைப்படங்கள்.!
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியைச் சேர்ந்தவர் ஜி. பி. முத்து. இவர் டிக் டாக் செயலி புழக்கத்தில் இருந்த காலக்கட்டத்தில், அதில் இவர் வெளியிட்ட வீடியோக்கள் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானவர். டிக் டாக் தடை செய்யப்பட்ட பிறகு யூ டியூபில் வீடியோக்களை வெளியிட ஆரம்பித்தார்.
இதன் மூலம் இவருக்கென்று தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. தொடர்ந்து ஜி.பி.முத்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் - 6 சீசனில் கலந்து கொண்டார். இதைத்தொடர்ந்து விஜய் டிவியின் "குக் வித் கோமாளி" நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்றார் ஜி பி முத்து.
இதைத் தொடர்ந்து ஜி.பி.முத்து சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். சிறிய, சிறிய வேடங்களில் நடித்து வரும் இவர், சன்னி லியோனுடன் இணைந்து "ஓ மை கோஷ்" என்ற படத்தில் நடித்தார். தொடர்ந்து முதன்மை தற்போது "ஆர்வன்" என்ற படத்தில் வேடத்தில் நடித்து வருகிறார்.
மணி ஆரவ் இயக்கும் இந்த படத்தில் ஜி பி முத்து திருநங்கை கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தெரிகிறது. ஜிபி வித்தியாசமான கெட்டப்பில் ஜி பி முத்துவின் புகைப்படம் உள்ள படத்தின் போஸ்டர் வெளியாகி இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.