வாவ்!! தங்கமீன்கள் படத்தில் நடித்த குட்டி பாப்பா இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா? லேட்டஸ்ட் புகைப்படம்!
வாவ்!! தங்கமீன்கள் படத்தில் நடித்த குட்டி பாப்பா இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா? லேட்டஸ்ட் புகைப்படம்!

தங்கமீன்கள் படத்தில் நடித்த குட்டி பெண்ணின் தற்போதைய புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது.
இயக்குனர் ராம் இயக்கத்தில் வெளியாகி மாபெறும் வெற்றிபெற்றது தங்கமீன்கள் திரைப்படம். ஒரு ஏழ்மையான தந்தைக்கும், அவரது மகளுக்கும் இடையே இருக்கும் அன்பை, பாசத்தை அழகாக, ஆழமாக எடுத்து கூறிய இந்த படம் பல்வேறு விருதுகளையும் பெற்று சாதனை படைத்தது.
இந்த படத்தின் பெரிய வெற்றிக்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், அதில் முக்கியான காரணங்களில் ஒன்று படத்தில் செல்லமாவாக நடித்த குட்டி பெண் சாதனாவின் அழகிய நடிப்பு. தங்க மீன்கள் படத்தில் அவர் நடிக்கும்போது அவருக்கு வயது 8 . தங்க மீன்கள் படத்தில் இவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.
தங்கமீன்கள் படத்தை அடுத்து, சாதனா மீண்டும் இயக்குனர் ராம் இயக்கத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி நடித்த பேரன்பு படத்தில் ஒரு ஸ்பெஷல் சைல்டாக நடித்து அசத்தியிருந்தார். அந்த படத்திலும் இவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.
ஆனால் அதன்பின்னர் இவர் என்ன ஆனார்? எந்த படத்தில் நடிக்கிறார்? என்ன செய்துகொண்டிருகிறார் என்ற எந்த தகவலும் இல்லை. ஆனால் தங்கமீன்கள் பட்டத்தின்போது 8 வயது குழந்தையாக இருந்த இவரின் தற்போதைய சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.