தமிழகம்

முருங்கைகாய் பறிக்க மாடிக்கு சென்ற பெண்ணிற்கு நேர்ந்த துயரம்! கதறி துடிக்கும் குடும்பத்தார்கள்!!

Summary:

தென்தாமரைக்குளம் அருகே முருங்கைக்காய் பறிக்க சென்ற பெண் மாடியில் இருந்து தவறி விழுந்து உயி

தென்தாமரைக்குளம் அருகே முருங்கைக்காய் பறிக்க சென்ற பெண் மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தென்தாமரைகுளம் அருகேயுள்ள விஜயநகரியை சேர்ந்தவர் தங்கதுரை. இவரது மனைவி அம்மாபழம். இவர்களுக்கு செல்வ சரண், செல்வ அஜிதா என்ற இரு பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் தங்கதுரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காலமானார். 

 இதனைத் தொடர்ந்து 31 வயது நிறைந்த செல்வ அஜிதாவிற்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு, அகஸ்தீஸ்வரம் அருகே கருங்குளத்தான் விளையைச் சேர்ந்த தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிபுரிந்து வந்த ராஜன் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு குழந்தை இல்லை. இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு செல்வ அஜிதா தனது அம்மா வீட்டிற்கு வந்துள்ளார்.

அவர் அண்மையில் சமையல் செய்வதற்காக முருங்கைக்காய் பறிக்க மாடிக்குச் சென்றுள்ளார். அப்பொழுது பறித்துக் கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக 15 அடி உயர மாடியிலிருந்து தவறி செல்வ அஜிதா கீழே விழுந்துள்ளார். படுகாயமடைந்து உயிருக்கு போராடிய அவரை உறவினர்கள் அவசரஅவசரமாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement