அழகோ அழகு..பேரழகு! கருப்பு நிற உடையில், தேவதையாய் ஜொலிக்கும் கேபி! சொக்கிபோன இளசுகள்!!

அழகோ அழகு..பேரழகு! கருப்பு நிற உடையில், தேவதையாய் ஜொலிக்கும் கேபி! சொக்கிபோன இளசுகள்!!



gebi-latest-photoshoot-viral

தமிழ் சினிமாவில் தனுஷ் மற்றும் ஸ்ருதி நடிப்பில் வெளிவந்து செம ஹிட்டான 3 படத்தில் ஸ்ருதியின் தங்கையாக, குழந்தை நட்சத்திரமாக நடித்து அறிமுகமானவர் கேப்ரில்லா. அதனைத் தொடர்ந்து அவர் சில படங்களில் துணை குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கேப்ரில்லா சிறுவயதிலேயே விஜய் டிவியில் பல நடன ரியாலிட்டி ஷோவில் பங்கேற்று பிரபலமடைந்துள்ளார். 

அதனைத் தொடர்ந்து கேப்ரில்லா   விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்களிடையே பெருமளவில் பிரபலமான பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அனைவரையும் பெருமளவில் கவர்ந்தார். பின்னர் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு அவர் பாடகர் ஆஜித்துடன் இணைந்து பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

மேலும் அவர் தற்போது ஈரமான ரோஜாவே 2 தொடரில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவார். அந்த வகையில் அவர் தற்போது கருப்பு நிற உடையில் தேவதை போல் ஜொலிக்கும் அழகிய புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அது இணையத்தில் வைரலாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது.