சினிமா

அடக்கொடுமையே இப்படி பறிப்போச்சே! அதிகாலையில் நடிகர் கெளதம் கார்த்திக்கிற்கு நேர்ந்த பரிதாபம்! போலீசார் தீவிர விசாரணை!

Summary:

நடிகர் கௌதம் கார்த்திக் அதிகாலை சைக்கிளில் சென்றபோது மர்ம நபர்கள் இருவர் அவரது செல்போனை பறித்துக்கொண்டு தப்பியுள்ளனர்.

தமிழ் சினிமாவில் 2013 ஆம் ஆண்டு வெளியான கடல் படத்தின் மூலமாக திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானவர் கௌதம் கார்த்திக். இவர் தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகராக கொடிகட்டிப் பறந்த நவரச நாயகன் கார்த்திக்கின் மகனாவார். அப்படத்தைத் தொடர்ந்து கௌதம் கார்த்திக் என்னமோ ஏதோ, வை ராஜா வை, இவன் தந்திரன், இருட்டுஅறையில் முரட்டுகுத்து, தேவராட்டம் என தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் கௌதம் கார்த்திக் நாள்தோறும் ஆழ்வார்பேட்டை டி.டி.கே சாலையில் சைக்கிளில் உடற்பயிற்சி செய்வது வழக்கம். இவ்வாறு அவர் இன்று அதிகாலை 5 மணியளவில் சைக்கிளில் சென்றுகொண்டு இருந்துள்ளார். அப்பொழுது பைக்கில் வந்த இரு நபர்கள் கௌதம் கார்த்திக்கின் விலையுயர்ந்த செல்போனை பறித்துகொண்டு தப்பித்துள்ளனர். 

Maalaimalar News: Gautham Karthik says lot of pictures with him

இதனால் அதிர்ச்சியடைந்த கௌதம் கார்த்திக் இதுகுறித்து மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதனடிப்படையில் போலீசார்கள் டிடிகே சாலையில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement