சினிமா

சேதுவின் ஆசை இதுதான்..! ஆனால் அவனை இப்படி கொண்டு போறிங்களே.. கதறி அழுத உறவினர்.!

Summary:

Funeral of actor sethuram

கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமவில் ஹீரோவாக அறிமுகமானவர் மருத்துவர் சேதுராம். நடிகர் சந்தானத்தின் நெருங்கிய நண்பரான இவர் மருத்துவ துறையில் இருந்து சினிமாவிற்கு வந்தார்.

முதல் படத்தை அடுத்து, வாலிபராஜா என்ற தமிழ் படத்திலும் ஒரு தெலுங்கு படத்திலும் நடித்துள்ளார். இந்நிலையில், 36 வயதாகவும் நடிகர் சேதுராம் திடீர் மாரடைப்பால் நேற்று முன்தினம் இரவு 8 . 30 மணியளவில் உயிர் இழந்தார். இளம் நடிகரின் இந்த திடீர் மரணம் அவரது குடும்பத்தாரையும், சினிமா பிரபலங்களையும் சோகத்தில் ஆழ்த்தியது.

இந்நிலையில், சேதுராமின் உடலுக்கு இறுதி மரியாதையை செலுத்தப்பட்டபின் அவரது உடல் தகனத்திற்காக தூக்கிச்செல்லப்பட்டது. அப்போது, அவனுக்கு ஆடி கார், பென்ஸ் கார் தான் ரொம்ப பிடிக்கும். அவனை காரில் கூடி செல்லாமல் இப்படி தூக்கி செல்கிறீர்கள் என சேதுவின் உறவினர் ஒருவர் கதறி அழுதது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது.


Advertisement