சினிமா

பிக்பாஸ் சீசன் 5வில் முதல் வைல்ட் கார்ட் என்ட்ரி இந்த பிரபல கவர்ச்சி நடிகையா! அடடா.. யார்னு பார்த்தீர்களா!!

Summary:

பிக்பாஸ் சீசன் 5வில் முதல் வைல்ட் கார்ட் என்ட்ரி இந்த பிரபல கவர்ச்சி நடிகையா! அடடா.. யார்னு பார்த்தீர்களா!!

விஜய் தொலைக்காட்சியில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரிதும் எதிர்பார்த்த பிக்பாஸ் சீசன் 5 கடந்த அக்டோபர் 3ஆம் தேதி தொடங்கி நாள்தோறும் மிகவும் விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் சென்று கொண்டுள்ளது. ஒவ்வொரு சீசனை போலவும் இந்த சீசனிலும் அன்பு, பாசம், சண்டை, சச்சரவுகளுக்கு பஞ்சமில்லாமல் சென்று கொண்டுள்ளது. 

இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 5 தொடங்கி முதல் முறையாக நடைபெற்ற நாமினேஷனில் நாதியா, நிரூவ், இமான் அண்ணாச்சி, இசைவாணி, பிரியங்கா, அபினய், அபிஷேக், அக்‌ஷரா ஆகியோர் வீட்டை விட்டு வெளியேற நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையில்  போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்ட திருநங்கை நமிதா மாரிமுத்து சில காரணங்களால் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறினார்.

இந்த நிலையில் தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்ட் என்ட்ரியாக கவர்ச்சி நடிகை ஒருவர் களமிறங்க உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகிறது. அதாவது வருத்தப்படாத வாலிபர் சங்கம், மிஸ்டர் லோக்கல், இரண்டாம் குத்து போன்ற படங்களில் நடித்துள்ள நடிகை ஷாலு ஷம்மு பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அது எந்த அளவிற்கு உண்மை என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Advertisement