பிரம்மாணட இயக்குநர் சங்கரின் திரைப்படத்தில் நடிக்க மறுத்த அஜித்... சங்கருடன் அஜித் மோதலா .!?fight-between-ajith-and-director-shankar

கோலிவுட் திரையுலகில் பிரம்மாண்ட இயக்கத்தின் உச்சம் என்றால் அது இயக்குநர் சங்கர் தான். இவர் ஜெண்டில் மேன், காதலன், ஜீன்ஸ், முதல்வன், இந்தியன், அன்னியன், சிவாஜி, எந்திரன் போன்ற பல ஹிட் படங்களை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அளித்து வருகிறார். 2010ஆம் வருடம் சங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த், ஐஸ்வர்யா நடிப்பில் வெளியானது எந்திரன் திரைப்படம்

அஜித்

மேலும் இப்படத்தில் கருணாஸ், சந்தானம், தேவதர்ஷினி, டெல்லிபாபு போன்ற நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். எந்திரன் படத்திற்குஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து கலாநிதி மாறன் தயாரிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டானது. படத்தின் வெற்றியை தொடர்ந்து எந்திரன் 2 திரைப்படமும் வித்தியாசமான கதைகோணத்தில் வெளியானது.

இத்தகைய நிலையில், இயக்குநர் சங்கர் பேட்டியில், அஜித்தை மனதில் வைத்தே எந்திரன் திரைப்படக் கதையை உருவாக்கினேன். அஜித்தை ஒரு நிகழ்ச்சியின்போது சந்திக்க நேர்ந்தது. அப்போது அவர், "உங்களுடைய படத்தில் நடிக்க ஆர்வமாக உள்ளேன் என்று கூறியிருந்தார்.

அஜித்

இதன்படி, எந்திரன் கதை உருவாகியபின்பு அஜித்தை சந்தித்து கதையை கூறியபோது அவர் இந்த கதை மிக பிரம்மாண்டமாக இருக்கிறது. சாதரணகதையில் நடிப்பதிலேயே ஆர்வமாக இருக்கிறேன். இந்த பிரம்மாண்ட கதை தொழில்நுட்பம் எல்லாம் வெற்றி பெறாவிட்டால் தயாரிப்பாளர்களுக்கு என்ன பதில் சொல்ல முடியும் என்று மறுத்துவிட்டாராம். இந்த பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.