சினிமா

செம்பருத்தி சீரியல் நடிகை பார்வதிக்கு மிகவும் பிடித்த தமிழ் ஹீரோ யார் தெரியுமா? விஜய்? அஜித்?

Summary:

Favorite actor of semparuthi actress sapana

தற்போது திரைப்படங்களுக்கு இணையான பேரும் புகழும் பெற்றுவருகிறது ஒருசில டிவி சீரியல் தொடர்கள். முன்னெல்லாம் சீரியல் என்றாலே வீட்டில் இருக்கும் பெண்கள் மட்டும்தான் பார்ப்பார்கள். ஆனால் தற்போது சிறுவர்கள் தொடங்கி ஆண்கள் வரை அனைவரும் சீரியல் பார்க்க தொடங்கிவிட்டனர்.

ஒரு சில சீரியல் தொடர்கள் வெற்றிபெறுவதற்கு முக்கிய காரணமாக இருப்பது அந்த தொடரில் நடிக்கும் காதாநாயகிதான். கதாநாயகியாக சீரியல் பார்க்கும் ஆண்கள் ஏராளம். அதுபோன்ற ஒரு சீரியல்தான் செம்பருத்தி. பிரபல தனியார் தொலைக்காட்சியான ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி தொடர் இன்று பலரது விருப்பமான தொடர்களில் ஒன்றாக உள்ளது. அதற்கு காரணம் அதில் நடிக்கும் பார்வதி என்ற கதாபாத்திரம்தான்.

இன்று பல இளைஞர்களின் கனவு கன்னியாக இருக்கும் பார்வதி என்ற ஷாபனா ஒரு பேட்டியில் தமிழில் தனக்கு மிகவும் பிடித்த நடிகர் யார் என்று தெரிவித்துள்ளார். அதைப்பற்றி அவர் கூறுகையில் தளபதி விஜய் என்றால் தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் அவர் பேசுவது தனக்கு மிகவும் பிடிக்கும் எனவும் கூறினார்.மேலும் விஜய், அஜித், விக்ரம், விஜய் சேதுபதி, ஜெயம் ரவி,சிம்பு போன்றவர்களின் படங்களை விரும்பி பார்ப்பேன் எனவும் கூறினார்.


Advertisement