தமிழகம்

காமவெறியின் உச்சம்! இப்படியெல்லாம் கூடவா மனிதர்கள் வாழ்கிறார்கள்?

Summary:

Father abused own daughter in vetharanyam

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. ஒருசில சமயங்களில் வேலியே பயிரை மேய்ந்தது போல பெற்ற தந்தையே தனது சொந்த மகளை பாலியல் சீண்டல் செய்யும் சம்பவங்களும் நடக்கத்தான் செய்கிறது.

அதுபோன்ற ஒரு சம்பவம்தான் இது. நாகை மாவட்டம் அருகே உள்ள மருதூர் கிராமத்தை சேர்ந்தவர் பாஸ்கர். இவருக்கு திருமணமாகி 2 மகள்கள் உள்ளனர். மனைவி வேலைக்காக வெளிநாடு சென்று தங்கியுள்ளார்.

இதனால், தனது மனைவி இல்லாத காரணத்தால் பாஸ்கர் தனது முதல் மகளிடம் அடிக்கடி பாலியல் சீண்டல்கலில் ஈடுபட்டு வந்துள்ளார். தந்தை தன்னிடம் இவாறு நடந்துகொள்வதை விரும்பாத அந்த பெண் தனது தந்தையிடம் எவ்வளவோ கெஞ்சியுள்ளார். ஆனால் இதையெல்லாம் காதில் வாங்காத தந்தை  நேற்று இரவு வீட்டில் இருந்த மகளை திடீரென பலவந்தமாக கற்பழித்துள்ளார். 

இதனால் ஆத்திரம் அடைந்த பெண், அருகில் இருந்த தனது உறவினர்களுடன் சேர்ந்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரை ஏற்றுக்கொண்ட போலீசார் பாஸ்கரை கைது செய்துள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தற்போது மருத்துவமையில் சிகிச்சை நடைபெற்று வருகிறது.


Advertisement