பாரதி கண்ணம்மா சீரியல் எப்போ முடியும்? ரசிகரின் கேள்விக்கு வில்லி வெண்பா கூறிய பதிலை பார்த்தீர்களா!!

பாரதி கண்ணம்மா சீரியல் எப்போ முடியும்? ரசிகரின் கேள்விக்கு வில்லி வெண்பா கூறிய பதிலை பார்த்தீர்களா!!


farina-answered-to-fan-question-about-bharathi-kannamma

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி, ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று ஒளிபரப்பாகி வரும் தொடர் பாரதி கண்ணம்மா. நாளுக்கு நாள் சுவாரஸ்யமாகவும் விறுவிறுப்பாகவும் சென்றுகொண்டிருக்கும் இந்த தொடருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. 

 இந்த தொடரில் பாரதி கதாபாத்திரத்தில் ஹீரோவாக 
அருண் பிரசாத் நடித்து வருகிறார். மேலும் கண்ணம்மாவாக, ஹீரோயினாக ரோஷினி என்பவர் நடித்து வருகிறார். மேலும் இத்தொடரில் கொடூர வில்லியாக, வெண்பா  என்ற கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் மிரள வைத்து வருபவர் பரினா. 

                         bharathi kannamma

இந்த நிலையில் சமூகவலைதளங்களில் பிஸியாக இருக்கும் பரினா அண்மையில் ரசிகர்களுடன் லைவ் சாட்டில் ஈடுபட்டுள்ளார். அப்பொழுது ரசிகர்களின் பல கேள்விகளுக்கும் பதிலளித்து வந்த அவரிடம் ரசிகர் ஒருவர் எப்பொழுது பாரதி கண்ணம்மா சீரியல் முடியும் என கேட்டுள்ளார். அதற்கு அவர் சீரியல் 2051ல் முடியும் என்று பதில் அளித்துள்ளார்.