சினிமா

அட.. குக் வித் கோமாளி புகழா இது! எம்புட்டு கூட்டம்.. ஹீரோக்களையே மிஞ்சிட்டாரே!

Summary:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி தற்போது ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வர

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி தற்போது ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வரும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இதில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் புகழ். இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த இவருக்கு தற்போது ஏராளமான பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

புகழ் தல அஜித்தின் வலிமை படத்தில் நடித்து வருகிறார். மேலும் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் தளபதி 65 படத்தில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இவ்வாறு ஆரம்ப கட்டத்தில் வாழ்க்கையில் பல கஷ்டங்களை அனுபவித்த புகழ் தற்போது ஏராளமான ரசிகர்களைக் கொண்டு புகழின் உச்சிக்கே சென்றுள்ளார். மேலும் அவர் சமீபத்தில் விலையுயர்ந்த காரை வாங்கியுள்ளார்.

இந்நிலையில் புகழ் சமீபத்தில் சிவகாசி சென்றுள்ளனர். அங்கு அவரை அடையாளம் கண்டு ரசிகர்கள் முழுவதும் காரை சுற்றிவளைத்து அன்புமழை பொழிந்துள்ளனர். ரசிகர்களின் அன்பை கண்டு நெகிழ்ந்து போன புகழ் அவர்களிடம் கை குலுக்கி மகிழ்ச்சியுடன் அங்கிருந்து மெதுவாக நகர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


Advertisement