சினிமா

ஆரி பிராடு, நீதான் உண்மையான வின்னர்! எல்லைமீறிய மீரா மிதுன்! செம கடுப்பான ரசிகர்கள்!

Summary:

மீரா மிதுன் ஆரி குறித்து மோசமாக பேசிய நிலையில் ரசிகர்கள் கடுப்பாகியுள்ளனர்.

விஜய் தொலைக்காட்சியில்  ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ். இதன் மூன்று சீசன்கள் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றநிலையில் நான்காவது சீசன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டு நாளுக்கு நாள் சுவாரசியங்களுடன் சென்ற நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முடிவுக்கு வந்தது.

இந்த சீசனில் சோம், ரம்யா, ரியோ, பாலா, ஆரி ஆகியோர் இறுதி நாட்கள் வரை வந்த நிலையில் நடிகர் ஆரி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். மேலும் பாலா இரண்டாவது இடத்தையும், ரியோ மூன்றாவது இடத்தையும் பெற்றனர். இந்நிலையில் ஆரி ரசிகர்கள் அவரை கொண்டாடினர்.

இந்நிலையில் மாடலும், முன்னாள் பிக்பாஸ் போட்டியாளருமான சர்ச்சைக்கு பெயர் போன மீரா மிதுன் டேய் பிராடு, ஆரிலாம் ஒரு ஆளே இல்ல. பெய்லியர், வேலைக்கு ஆகாத பார்ட்ஸ் டேமேஜ் ஆன வயசான ஆளு. பில்டப் கொடுக்காதீங்க அல்லகைகளா என மோசமாக பேசியுள்ளார்.

மேலும் பாலாஜி முருகதாஸ்தான் ரியல் வின்னர். ஆரி பிராடு. பாலாஜி ஆரம்பத்திலிருந்து உனக்கு எதிராக நடக்கும் விஷயங்களை நான் சொல்லி வருகிறேன் என கூறியுள்ளார்.


Advertisement