சினிமா

கவர்ச்சி உடையில் வந்த நடிகை! செல்பி எடுக்கும் போது முத்தம் கொடுக்க முயன்ற ரசிகர்! அதிர்ச்சி வீடியோ!

Summary:

fan trying to kiss to actress


பிரபல பாலிவுட் நடிகர் சைப் அலி கானின் மகள் தான் சாரா அலி கான். இவர் தற்போது பாலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருக்கின்றார்.  இவர் நடித்து பாலிவுட்டில் வெளியான, கேதர்நாத் மற்றும் சிம்பா போன்ற படங்கள் மெஹா ஹிட்டை கொடுத்தது. தற்போது சாரா அலிகானின் நடிப்பில் கூலி நம்பர் 1 என்ற படம் வெளியாக உள்ளது.

இவர் தினம்தோறும் ஜிம் உள்ளிட்ட இடங்களுக்கு சென்றுவருவது வழக்கம். இந்த நிலையில் நேற்று சாரா அலிகான் ஜிம்மில் உடற்பயிற்சி செய்துவிட்டு வெளியே வந்தபோது அவருடன் செல்பி எடுக்க சில ரசிகர்கள் அனுமதி கேட்டனர். ரசிகர்களின் விருப்பத்திற்கு இணங்க அவர் ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்ட்டிருந்தார்.

அப்போது திடீரென ரசிகர் ஒருவர் சாராவின் கையில் முத்தம் கொடுக்க முயன்றுள்ளார். நடிகை சுதாரித்துக்கொண்டு கையை எடுத்துக்கொண்டார், அருகில் இருந்த பாதுகாவலர் அந்த நபரை துரத்தியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. 
 


Advertisement