அச்சச்சோ... நடிகை மஞ்சு வாரியார் இடுப்பை ரசிகர் ஒருவர் கிள்ளிவிட்டாரா? என்ன ஆச்சு...இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ....



fan-touches-manju-warrier-hip--video-goes-viral

மலையாள திரைப்படத் துறையின் முன்னணி நடிகையாக திகழும் மஞ்சு வாரியர், சமீபத்தில் பெங்களூரில் நடைபெற்ற ஷாப்பிங் மால் திறப்பு விழாவில் கலந்துகொண்டார். நீல நிற சுடிதார் அணிந்து வந்த அவர், நிகழ்ச்சியை முடித்த பின் தனது காரில் ஏறியபோதும், ரசிகர்களின் மனம் கவர்ந்து, காரை நிறுத்தி கொண்டு தாமாகவே சிலருடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார்.

இந்த சந்திப்பின் போது ஏற்பட்ட ஒரு விபரீதமான சம்பவம் தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செல்ஃபி எடுக்கும் கூட்டத்தில் இருந்த ஒரு இளைஞர், மஞ்சு வாரியரை அணுகியபோது அவசரத்தில் அவர் இடுப்பைத் தொட்டுவிட்டார். இதனால் சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

நடிகை மஞ்சு வாரியர், தற்போது மோகன்லால் நடிக்கும் எம்புரான் படத்தில் அரசியல் தலைவராக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். தமிழ் சினிமாவிலும் வெற்றிகரமாகப் பயணித்து வரும் அவர், அசுரன், துணிவு, விடுதலை 2, மிஸ்டர் எக்ஸ் போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரங்கள் வகித்துள்ளார்.

இதையும் படிங்க: முதன்முறையாக வானவில்லை பார்த்து மகிழ்ந்த உயிர் மற்றும் உலக்... நயன்தாரா பகிர்ந்த மனதை உருக்கும் வீடியோ இதோ!

இந்தச் சம்பவம் தொடர்பாக தற்போது பொது மக்களிடையே மிகுந்த பதட்டமும், அந்த நபரின் மீது கண்டனமும் பரவியுள்ளது. 

 

 

இதையும் படிங்க: அஜித் பட நடிகை பிரியா பிரகாஷ் வாரியரின் குடிபோதை காணொளி இணையத்தில் வைரல் – முழு விபரம் இதோ!