
தெலுங்கு நடிகர் உத்தேஜின் மனைவி பத்மாவதி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகி
தெலுங்கு நடிகர் உத்தேஜின் மனைவி பத்மாவதி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
தெலுங்கு நடிகர் உத்தேஜின் மனைவி பத்மாவதிக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி பத்மாவதி அவர்கள் காலமானார். அவரது மரணச் செய்தியை அறிந்த பிரபல நடிகர் சிரஞ்சீவி உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்து நடிகர் உத்தேஜ்க்கு ஆறுதல் கூறியுள்ளார். சிரஞ்சீவியை கண்டதும் உத்தேஷ் கட்டியணைத்து கதறியுள்ளார்.
அவரைத் தொடர்ந்து பிரபலங்கள் சிலர் மருத்துவமனைக்கு வந்து உத்தேஜை சந்தித்து அவருக்கு ஆறுதல் கூறியுள்ளனர். மேலும் சில பிரபலங்களும், ரசிகர்களும் சமூக வலைத்தளத்தில் பத்மாவதியின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Advertisement
Advertisement