"ஹார்பிக்" குடித்து தற்கொலை முயற்சி.. தமிழ் சீரியல் நடிகை விபரீதம்.!!



famous-tamil-serial-actress-suicide-attempt-drinks-harp

பிரபல சீரியல் துணை நடிகை கணவருடன் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கணவருடன் பிரச்சனை :

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கயல் உள்ளிட்ட பல சீரியல்களில் துணை நடிகையாக நடித்து வருபவர் அமுதா (வயது 28). இவர் தனது கணவருடன் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக கடந்த சில நாட்களாகவே மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். 

தற்கொலை முயற்சி :

இந்நிலையில் சென்னை, சாலிகிராமத்தில் உள்ள தனது வீட்டில் நேற்று பாத்ரூம் கழுவுவதற்கு உபயோகிக்கும் ஹார்பிக்கை குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இதனை தொடர்ந்து உயிர் பயத்தில் தனது தோழிக்கு தகவல் அளிக்கவே, அவர் விரைந்து வந்து அமுதாவை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். 

இது தொடர்பாக விருகம்பாக்கம் காவல்துறையினர் நடிகையின் கணவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: அட.. இவங்கெல்லாமா.! குக் வித் கோமாளியில் களமிறங்கும் பிரபலங்கள்.! யார் யார்னு பார்த்தீங்களா!!