தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் திடீர் மறைவு.! சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!
அட.. இவங்கெல்லாமா.! குக் வித் கோமாளியில் களமிறங்கும் பிரபலங்கள்.! யார் யார்னு பார்த்தீங்களா!!

விஜய் தொலைக்காட்சியில் சமையல் திறனை ஊக்குவித்து அதனையே ரசிகர்களை கவரும்படி காமெடியாக ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிதான் குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சிக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இந்த நிகழ்ச்சியில் 5 சீசன்கள் முடிவடைந்த நிலையில் தற்போது 6வது சீசன் தொடங்கப்பட உள்ளது.
குக் வித் கோமாளி சீசன் 6
இந்த நிகழ்ச்சியில் துவக்கத்தில் இருந்து நடுவர்களாக இருந்தவர்கள் செஃப் வெங்கடேஷ் பட் மற்றும் செஃப் தாமு. ஆனால் கடந்த சீசனில் செஃப் வெங்கடேஷ் பட் நிகழ்ச்சியிலிருந்து விலகினார். தொடர்ந்து மாதம்பட்டி ரங்கராஜ் புது நடுவரானார். மேலும் இந்த சீசனில் செஃப் கௌசிக்கும் நடுவராக இணைந்துள்ளார். குக் வித் கோமாளி 6வது சீசன் மே 4 ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது.
இதையும் படிங்க: இதைத்தான் எதிர்பார்த்தோம்.. ரசிகர்களின் பேவரைட் குக் வித் கோமாளி சீசன் 6.! எப்போ தெரியுமா??
போட்டியாளர்களாக களமிறங்கும் பிரபலங்கள்
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஏற்கனவே புகழ், சுனிதா, சரத், குரேஷி, ராமர் ஆகியோர் கோமாளியாக இருந்தனர். மேலும் தற்போது பிக்பாஸ் செளந்தர்யா, இன்ஸ்டா பிரபலம் சர்ஜின் குமார், கானா பாடகர் பூவையார் மற்றும் டோலி ஆகியோரும் புதிய கோமாளியாக இணைய உள்ளனராம். மேலும் நிகழ்ச்சியில் இந்த சீசனில் சொல்வதெல்லாம் உண்மை புகழ் லட்சுமி ராமகிருஷ்ணன், செம்பருத்தி சீரியல் புகழ் ஷபானா, நடிகை பிரியா ராமன் மற்றும் உமா லத்தீப் ஆகியோர் போட்டியாளர்களாக களமிறங்குகின்றனர்.
இதையும் படிங்க: இதைத்தான் எதிர்பார்த்தோம்.. ரசிகர்களின் பேவரைட் குக் வித் கோமாளி சீசன் 6.! எப்போ தெரியுமா??