இதைத்தான் எதிர்பார்த்தோம்.. ரசிகர்களின் பேவரைட் குக் வித் கோமாளி சீசன் 6.! எப்போ தெரியுமா??



cook-with-comali-season-6-starts-in-may-4

விஜய் தொலைக்காட்சியில் திறமைகளை ஊக்குவிக்கும் வகையிலும் மக்களை கவரும் வகையிலும் ஏராளமான ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அவ்வாறு சமையல் திறனை ஊக்குவித்து அதனையே ரசிகர்களை கவரும்படி காமெடியாக ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிதான் குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சிக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

குக் வித் கோமாளி சீசன் 6

இதுவரை 5 சீசன்கள் முடிவடைந்த நிலையில் தற்போது குக் வித் கோமாளி 6வது சீசன் தொடங்கப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில் துவக்கத்தில் இருந்து செஃப் வெங்கடேஷ் பட், செஃப் தாமு ஆகியோர் நடுவர்களாக இருந்தனர். ஆனால் கடந்த சீசனில் செஃப் வெங்கடேஷ் பட் நிகழ்ச்சியிலிருந்து விலகினார். மேலும் மாதம்பட்டி ரங்கராஜ் புது நடுவரானார். மேலும் இந்த சீசனில் செஃப் கௌசிக்கும் நடுவராக இணைந்துள்ளார். 

cook with comali

இதையும் படிங்க: விஜய் டிவி பிரியங்காவிற்கு திடீரென முடிந்த இரண்டாவது திருமணம்.! மாப்பிள்ளை இவர்தான்.. அவரே வெளியிட்ட பதிவு.!

இதுகுறித்த ப்ரோமோ வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகிறது இந்த நிலையில் தற்போது குக் வித் கோமாளி 6வது சீசன் மே 4 ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிக்கு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. மேலும் புதிய ஆட்டம், புதிய நடுவர் என புதுப்பொலிவுடன் ஒளிபரப்பாகவுள்ள இந்த நிகழ்ச்சியை காண ரசிகர்கள் பெரும் ஆவலுடன் உள்ளனர். 

இதையும் படிங்க: பத்மபூஷன் பெற்ற நடிகர் அஜித் திடீரென சென்னை மருத்துவமனையில் அனுமதி! ரசிகர்கள் அதிர்ச்சி!