ரசிகர்களின் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்த பிரபல பின்னணி பாடகி காலமானார்.! சோகத்தில் ரசிகர்கள்.!

ரசிகர்களின் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்த பிரபல பின்னணி பாடகி காலமானார்.! சோகத்தில் ரசிகர்கள்.!


famous singer died

பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் உடல்நல குறைவு காரணமாக இன்று காலமானார். 

இந்தி, தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ஏராளமான பாடல்களை பாடி ரசிகர்களின் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்தவர் பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர். 92 வயது நிரம்பிய இவர் கடந்த 70 ஆண்டுகளாக பல்வேறு மொழிகளில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி உள்ளார். தமிழில் வளையோசை, ஆராரோ ஆராரோ,  எங்கிருந்தோ அழைக்கும் என் ஜீவன் உட்பட  பல்வேறு பாடல்களை பாடியுள்ளார்.

லதா மங்கேஷ்கருக்கு ஜனவரி 8 ம் தேதி கொரோனா தொற்று உறுதியானது. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்ற அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதாக சில நாட்களுக்கு முன்பு மருத்துவர்கள் தெரிவித்தனர். 

இந்தநிலையில் நேற்று திடீரென அவரது உடல்நிலை மோசமான நிலையில், இன்று காலை 9;30 மணியளவில் காலமானார். பாரத ரத்னா உள்ளிட்ட பல்வேறு உயரிய விருதுகளை லதா மங்கேஷ்கர் பெற்றுள்ளார். இவருக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.