சினிமா

பிரபல மெட்டி ஒளி சீரியல் நடிகர் மாரடைப்பால் மரணம்! சோகத்தில் திரையுலகம்!

Summary:

Famous serial metti oli actor vijay raj dead due to heart attack

தற்போது வெள்ளித்திரையை விட சின்னத்திரை ரசிகர்கள் அதிகமாகிவிட்டனர். சிறுவர்கள் தொடங்கி, பெரியவர்கள் வரை அனைவரும் சீரியல் பார்க்க ஆரம்பித்துவிட்டனர். சீரியல் என்றாலே அதற்கு பெயர் போனது நம்ம சன் டிவி தான்.

சில்வருடங்களுக்கு முன்பு சன் டீவியில் ஒளிபரப்பாகி மாபெரும் வெற்றிபெற்ற தொடர் மெட்டி ஒளி. இதில் சோகமான விஷயம் என்னவென்றால் மெட்டி ஒளி சீரியலில் நடித்த விஜய்ராஜ் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.

சின்னத்திரையில் தனது இயல்பான நடிப்பினாலும், உடல்மொழியாலும் அனைவரின் மனதையும் கவர்ந்தவர் நடிகர் விஜயராஜ். இவர் மெட்டி ஒலி, நாதஸ்வரம், கோலங்கள் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து பிரபலம் ஆனார்.

இந்நிலையில், 43 வயதான விஜயராஜ் பழனியில் உள்ள அவரது வீட்டில் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். இவரின் மரண செய்தி கேட்டு சின்னத்திரை பிரபலங்கள் பலர் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.

இவரின் இறப்பிற்கு திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.


Advertisement