சினிமா

வாழ கூட வசதி இல்லாமல் உயிரை விட்ட பிரபல நடிகரின் மகன்! யார் தெரியுமா?

Summary:

Famous producer hariharan death

சினிமா நடிகர்கள் என்றாலே ஆடம்பர வீடு, காரு, பங்களா இப்டி வசதியாகத்தான் வாழ்வார்கள் என்று நாம் நினைத்திருபோம். ஆனால் அது உண்மையா? எல்லோரும் அப்படித்தான் வாழ்கிறார்களா? நிச்சயமாக இல்லை. இதில் பெரிதும் பாதிக்கப்படுபவர்கள் தயாரிப்பாளர்கள்தான். படம் எதிர்பார்த்தபடி ஓடிவிட்டாள் அனைவர்க்கும் அது நல்லது. ஒருவேளை படம் ஓடாவிட்டால் தயாரிப்பாளரை தவிர அனைவரும் தப்பித்துவிடுவார்கள். ஆனால் பணம் போட்ட தயாரிப்பாளரின் நிலை? நிச்சயம் கேள்வி குறிதான்.

மன்னாதி மன்னன், வஞ்சிக்கோட்டை வாலிபன், மீனவ நண்பன் போன்ற படங்களில் வில்லனாக நடித்தவர் பிஎஸ் வீரப்பா. அவர் சினிமா தயாரிப்பிலும் ஈடுபட்டிருந்தார். வீரப்பாவின் மறைவுக்கு பிறகு அவரது மகன் ஹரிஹரன் தயாரிப்பை தொடர்ந்தார். அவர் 30கும் மேற்பட்ட படங்களை தயாரித்துள்ளார். இவரது கெட்ட நேரம் இவர் தயாரித்த பல படங்கள் தோல்வியை தழுவின.

இதனால் குடும்பமே வறுமையில் வாட்டியது. சொந்த வீடு கூட இல்லாமல், அன்றாட செலவுக்கே தடுமாறியுள்ளது இவரது குடும்பம். இவரது நிலைமையை பார்த்த தயாரிப்பாளர் தாணு 1 லட்ச ருபாய் உதவி செய்திருந்தார். இந்நிலையில் ஹரிஹரன் சில நாட்களுக்கு முன்பு தடுமாறி கீழே விழுந்ததில் அவரது தலையில் அடிபட்டுள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஹரிஹரன் நேற்று மூச்சு திணறல் காரணமாக இறந்துவிட்டார்.


Advertisement