"எரியுது டி மாலா" புகழ் காமெடி நடிகையின் வாழ்க்கையில் நடந்த சோகம்.. ஒளிப்பதிவாளர் செய்த கேடு கெட்ட செயல்.?



Famous co female acter struggle in cinema

சினிமா துறையில் அட்ஜஸ்ட்மென்ட் என்பது சாதாரணமாக எல்லாராலும் பேசப்பட்டு வருகிறது. திறமைகளுக்கு மதிப்பளிக்காமல் படுக்கையறைக்கு அழைக்கும் பிரபலங்களினால் சினிமா துறையே அட்ஜஸ்ட்மென்ட் மட்டும்தான் நிறைந்து இருக்கிறது என்று மக்கள் மனதில் பதிந்து விட்டது.

Vadivelu

தற்போது மீ டு சர்ச்சை ஆரம்பமானதிலிருந்து அட்ஜஸ்ட்மென்ட் குறித்து பல நடிகைகள் தொடர்ந்து பேசி வருகின்றனர். இதன்படி தற்போது நடிகை தாரணி அட்ஜஸ்ட்மென்ட் குறித்து அவர் சந்தித்த பிரச்சனைகளை பேட்டியில் கூறி இருக்கிறார்.


அபேட்டியில் தாரணி கூறியதாவது, "நான் ஒரு படத்தில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருந்தேன். அந்த படத்தின் ஒளிப்பதிவாளரும், இயக்குனரும் என்னை அட்ஜஸ்ட்மெண்ட்ற்கு அழைத்தார்கள். நான் மறுத்ததும் இயக்குனர் விட்டுவிட்டார். ஆனால் ஒளிப்பதிவாளர் எனக்கு மிகவும் தொல்லை கொடுத்தார்.

Vadivelu

நான் தொடர்ந்து மறுத்துக் கொண்டிருந்த காரணத்தால், படப்பிடிப்பின் போது ஹெச் எம் வி லைட் எனும் அதிக சூடாக இருக்கும் லைட்டை என் முகத்திற்கு நேராக திருப்பி விட்டார். இதனால் முகம் எரிந்த மாதிரி ஆகிவிட்டது. இதன்பின் நான் கதறி கதறி அழுக ஆரம்பித்துவிட்டேன். பட குழுவினர் அனைவரும் என்னை சமாதானப்படுத்தினர். எதனால் அந்த ஒளிப்பதிவாளர் இப்படி செய்தார் என்று எனக்கு மட்டும்தான் தெரியும் என்று பேட்டியில் கூறியிருக்கிறார்.