காவாலா பாட்டு எல்லாம் ஓரம் போ!! வந்துட்டா மோனிகா.. வைரலாகும் லேட்டஸ்ட் பாடல்.
அஞ்சலியுடன் காதல் திருமணம்! சர்ச்சைகளை விரட்டியடித்து, ரகசியத்தை போட்டுடைத்த பிரபல நடிகர்.!

தமிழ் சினிமாவில் பகவதி படத்தில் விஜய்க்கு தம்பியாக நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகர் ஜெய்.அதனை தொடர்ந்து அவர் சென்னை-28 , சுப்ரமணியபுரம், சரோஜா, எங்கேயும் எப்போதும், ராஜாராணி என பல வெற்றி படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானார்.
இந்நிலையில் வளர்ந்து வரும் நடிகரான ஜெய் நடிப்பில் பார்ட்டி, நீயா-2 ஆகிய படங்கள் திரையில் வெளிவர தயாராகி இருக்கின்றன.
அதனை தொடர்ந்து ஜெய் மம்முட்டியுடன் இணைந்து மலையாளத்தில் மதுரராஜா என்ற படத்தில் நடித்து வருகிறார்.
மேலும் எங்கேயும் எப்போதும் மற்றும் பலூன் படத்தில் நடித்ததன் மூலம் ஜெய், அஞ்சலி இருவரும் காதலிப்பதாகவும்,அதனை தொடர்ந்து இருவரும் திருமணம் செய்துகொள்ளப் போவதாகவும் தகவல் வெளியானது.
அதனை தொடர்ந்து அவர்களது காதல் முறித்தாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் இது குறித்து ஜெய் கூறுகையில் , நானும், அஞ்சலியும் நெருங்கி பழகியது உண்மைதான். ஆனால் எங்கள் இருவருக்கும் இடையே நல்ல நட்பு மட்டுமே இருந்தது. மேலும் அஞ்சலி என் காதலி இல்லை, நெருக்கமான நல்ல தோழிதான். எங்கள் நட்பு எப்பொழுதும் தொடரும் என்று கூறினார்.