இது போலி.. அவர் கிடையாது! ஷாலினி குறித்த முக்கிய தகவலை வெளியிட்ட அஜித் மேலாளர்! ஷாக்கான ரசிகர்கள்!!

தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ஏராளமான படங்களில் நடித்து பெருமளவில் பிரபலமானவர் நடிகை ஷாலினி. இவரை அனைவரும் செல்லமாக பேபி ஷாலினி என்றே அழைத்தனர். அதனை தொடர்ந்து ஹீரோயினாக களமிறங்கிய அவர் விஜய் அஜித், பிரசாந்துடன் சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.
அவர் அமர்க்களம் படத்தில் நடித்தபோது நடிகர் அஜித்தை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு அனோஷ்கா, ஆத்விக் என இரு பிள்ளைகள் உள்ளனர். அஜித், ஷாலினி யாருமே சமூக வலைத்தளபக்கங்களில் இல்லை. இந்த நிலையில் ஷாலினி பெயரில் புதிய டுவிட்டர் கணக்கு ஒன்று உருவானது.அதனைக் கண்ட அஜித் ரசிகர்கள் அவரை வரவேற்று பதிவுகளை வெளியிட்டனர்.
இந்நிலையில் இதுகுறித்து நடிகர் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா விளக்கமளித்து தனது டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், ஷாலினி அஜித்குமார் என்ற பெயரில் போலி ட்விட்டர் கணக்கு தொடங்கப்பட்டிருக்கிறது. இந்த விஷயத்தில் நடிகை ஷாலினி, ட்விட்டரில் இல்லையென்பதை மீண்டுமொருமுறை உறுதிப்படுத்துகிறோம் என தெரிவித்துள்ளார். இந்த நிலையில் அந்த டுவிட்டர் கணக்கை உடனே முடக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
There is a fake twitter account in the name of #MrsShaliniAjithkumar and we would like to clarify that she is not in twitter. Kindly ignore the same .
— Suresh Chandra (@SureshChandraa) February 2, 2022