இந்தியா சினிமா

கல்லீரல் பிரச்சனை..! நடிகர் மாதவனின் பட இயக்குநர் மிகவும் கவலைக்கிடம்..! சோகத்தில் ரசிகர்கள்.

Summary:

Evano Oruvan movie director nishikant in critical stage

தமிழில் மாதவன் நடிப்பில் வெளியான எவனோ ஒருவன் என்ற படத்தை இயக்கிய பிரபல இயக்குனர் நிஷிகாந்த் காமத் கல்லீரல் பிரச்சனை காரணமாக மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2007-ம் ஆண்டு  மாதவன், சங்கீதா, சீமான் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான "எவனோ ஒருவன்" என்ற படத்தை இயக்கியவர் இயக்குனர் நிஷிகாந்த் காமத். தமிழில் இவர் இயக்கிய ஒரே படம் இதுமட்டுமே என்றாலும், தமிழ் தவிர மலையாளம், ஹிந்தி, மராத்தி ஆகிய மொழிகளிலும் பல்வேறு படங்களை இயக்கியுள்ளார்.

மேலும் பாலிவுட் சினிமாவில் நடிகராகவும் வலம் வரும் இவர் கல்லீரல் பிரச்னையால் பாதிக்கப்பட்டு ஹைதரபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்றுவருகிறார். இருப்பினும் அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இயக்குனர் நிஷிகாந்த் காமத் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என திரையுலக பிரபலங்கள் உட்பட பலரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.


Advertisement