சினிமா

நடிகை எமி ஜாக்சனுக்கு குழந்தை பிறந்துவிட்டது.. முதன் முதலாக வெளியான கணவர் மற்றும் குழந்தையின் அழகிய புகைப்படம் இதோ!!

Summary:

emi jackson blessed with girl baby

தமிழில் மதராசப்பட்டினம் படம் மூலம் அறிமுகமானவர் எமி ஜாக்சன். அதனை தொடர்ந்து ஐ, 2.0 என சில படங்களே நடித்த போதும், தமிழின் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம், தமிழில் வேகமாக முன்னேறினார். லண்டனைச் சேர்ந்த எமி 2.0 படத்திற்கு பின் தமிழில் எந்த படமும் ஒப்பந்தமாகவில்லை. 

மீண்டும் லண்டன் பறந்த அவர் அங்கு ஜார்ஜ் பெனாய்டோ என்ற தொழிலதிபரை காதலிப்பதாக அறிவித்தார். திருமணத்திற்கு முன்பே கர்ப்பமானதாக கடந்த மார்ச் மாதம் எமி அறிவித்தார். இது தமிழ் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து கர்ப்பிணியான எமிக்கும், அவரது காதலருக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

 குழந்தை பிறந்த பின்னர் அவர்களது திருமணம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சமூகவலைதளங்களில் எப்போதும் பிசியாக இருக்கும் எமி கர்ப்பமாக இருக்கும் போதும் தனது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவேற்றுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

இந்நிலையில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே எமிக்கு இன்று ஆண்குழந்தை பிறந்துள்ளது. அதற்கு ஆண்ட்ராஸ் என பெயரிட்டுள்ளனர். இந்நிலையில் கணவர், குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு நடிகை எமி ஜாக்சன் அவரது குழந்தைக்கு வரவேற்பு அளித்துள்ளார். அந்த புகைப்படங்கள் வைரலாகும் நிலையில் ரசிகர்கள் அனைவரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.

View this post on Instagram

Our Angel, welcome to the world Andreas 💙

A post shared by Amy Jackson (@iamamyjackson) on


Advertisement