அடடே.. காவியாவை மருமகளாக ஏற்றுக்கொண்ட பார்த்தியின் அம்மா.. ட்விஸ்ட் வைத்த தேவி.. ஈரமான ரோஜாவே ப்ரோமோ.!

அடடே.. காவியாவை மருமகளாக ஏற்றுக்கொண்ட பார்த்தியின் அம்மா.. ட்விஸ்ட் வைத்த தேவி.. ஈரமான ரோஜாவே ப்ரோமோ.!Eeramaana rojave today episode

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே தொடர் 2ம் பாகம் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடரில் நாயகி காவியாவின் திருமணம் விருப்பம் இல்லாமல் நடந்தாலும், நாயகன் பார்த்திபன் தனது நாயகியை ஏற்றுக்கொண்டு அவருடன் வாழ்ந்து, இறுதிவரை இவர்கள் தங்கள் முடிவை சொல்லிக்கொள்ளாமல் விவகாரத்து ஆனது.

இந்த நிலையில், தற்போது பார்த்திக்கும் - அவரின் அத்தை மகள் ரம்யாவுக்கு திருமணம் செய்ய தேவி ஏற்பாடுகளை செய்துள்ளார். திருமண வைபோகங்கள் கூடிவந்தபோது, பார்த்தியின் அம்மாவுக்கு காவியாவின் முன்னாள் காதலர் தனது மற்றொரு மகன் என்ற உண்மை தெரியவருகிறது.

தமிழ் சினிமா

இதன்பின்னர் கவியாவுக்கும் - பார்த்திக்கும் திருமணம் நடக்க வேண்டும் என தேவியை சந்தித்து பேச, பார்த்தியை மகளுக்கு வளைத்துப்போடும் எண்ணத்தில் இருக்கும் அவர் மகளுடன் சேர்ந்து பார்த்தியின் தாயாரை கொலை செய்ய முயற்சித்து தலையில் கட்டையால் அடித்து தாலிகட்டும் வைபோகத்திற்கு தயாராகின்றனர். 

இதுதான் இந்த வார ப்ரோமோ. ஆனால், ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் வைத்துள்ள தயாரிப்பு குழு, பார்த்தி தாலியை கையில் எடுத்து ப்ரமோவை முடித்துக்கொண்டது. இதனால் திருமணம் ரம்யாவுடன் நடைபெற்றதா? நின்று போனதா? பார்த்தி - காவியா திருமணம் நடந்ததா? என்பது நாளை அல்லது நாளை மறுநாள் தெரியவரும்.