எதிர்நீச்சல் சீரியலின் ரியல் அண்ணன், தம்பிகள் இவர்கள்தானா.. வைரலாகும் வீடியோ.!



edhirneechal-serial-real-brothers

சன் தொலைகாட்சியில் தினமும் ஒளிபரப்பாகி டிஆர்பியில் சக்கை போடு போடும் தொடர் "எதிர்நீச்சல்". கூட்டுக்குடும்பத்தில் வாழ வரும் பெண்கள், ஆணாதிக்க மனப்பான்மையோடு இருக்கும் குணசேகரன் மற்றும் அவர்களது தம்பிகளை எப்படி எதிர்த்துப் போராடுகிறார்கள் என்பதே இந்த சீரியலின் கதை.

suntv

திருச்செல்வம் இயக்கும் எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்களின் மனதை கவர்ந்து தற்போது வரை முதலிடம் பிடித்து வருகிறது. மேலும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த சீரியலுக்கு ரசிகர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற நிலையில், எதிர்நீச்சல் சீரியலில் நடித்திருக்கும் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தை போலவே உண்மையான ஆதி குணசேகரன் இருக்கிறார். அவரை மையமாக வைத்து தான் இந்த சீரியலை இயக்கியிருக்கிறேன் என்று ஆரம்பத்தில் திருச்செல்வம் பேசியிருந்தார்.

suntv

இந்நிலையில் தற்போது ரியல் ஆதி குணசேகரன் மற்றும் அவரது தம்பிகள் பிரபல யூட்யூப் சேனலுக்கு பேட்டியளித்தனர். அந்த பேட்டியில் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தை குறித்தும், திருச்செல்வம் குறித்தும் பெருமிதமாக பேசியிருந்தார். இந்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.