பிரபல நடிகருடன் அடுத்தடுத்து நடிக்க மறுக்கும் நடிகைகள்; காரணம் என்னவாக இருக்கும்!Eashmika mandhana refuses for magesh babu movie

தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகராக இருந்து வருபவர் மகேஷ் பாபு. இவரது 26ஆவது படத்தினை இயக்குநர் அனில் ரவிபுதி இயக்கவுள்ளார். முதலில் இந்த படத்தில் நடிக்க சாய் பல்லவி மறுப்பு தெரிவித்தார். தற்போது அவரைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனாவும் நடிக்க மறுத்துள்ளார். 

தெலுங்கில் மகேஷ் பாபுவின் அடுத்த படத்தில் நடிக்க இயக்குநர் அனில் ரவிபுதி, சாய் பல்லவியிடம் அணுகியுள்ளார். ஆனால் அவரோ கதையை கூட கேட்காமல் படத்தில் நடிக்க முடியாது என்று மறுத்துள்ளார். காரணம், அடுத்த ஆகஸ்ட் வரை பிஸியாக இருப்பதாகவும் புதிய படங்களில் இப்போது நடிக்க விருப்பமில்லை என்றும் கூறியுள்ளார். 

Magesh babu

ஆனால் உண்மையில், சாய் பல்லவியின் ரசிகர்களில் சிலருக்கு அவர் மகேஷ் பாபுவுடன் நடிப்பது பிடிக்கவில்லையாம். மேலும் மகேஷ் பாபுவின் ரசிகர்களும், அவருக்கு ஜோடியாக கீதா கோவிந்தம் படத்தில் நடித்த ராஷ்மிகா மந்தனா தான் சரியாக இருப்பார்; சாய் பல்லவி ஒத்துவர மாட்டார் என கமெண்ட் செய்துள்ளனராம். இதைக் கேட்டு அப்செட்டானதால் தான் சாய் பல்லவி கதையை கூட கேட்காமல் மகேஷ் பாபுவின் படத்தில் நடிக்க முடியாது என்று கூறியுள்ளாராம். 

Magesh babu

அதனைத் தொடர்ந்து இயக்குனர், கீதா கோவிந்தம் படத்தில் நடித்த ராஷ்மிகா மந்தனாவை நடிக்க வைக்க அணுகியுள்ளார். ஆனால் தற்பொழுது அவரும் பிஸியாக இருப்பதாக கூறி மகேஷ் பாபு படத்தில் நடிக்க மறுத்துள்ளார். 

இவ்வாறு நடிகைகள் அடுத்தடுத்து மகேஷ் பாபுவின் படத்தில் நடிக்க மறுப்பு தெரிவித்திருப்பது மகேஷ் பாபுவின் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.