சினிமா

அடேங்கப்பா..! தந்தை போலவே உடல் எடையை ஏற்றி ஆளே மாறிய நடிகர் விக்ரம் மகன்.! வைரல் புகைப்படம்.!

Summary:

Duruv Vikram latest photo goes viral

விக்ரமின் மகன் துருவ் விக்ரம் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் அடுத்த படத்தில் நடிக்க இருக்கும் நிலையில் அந்த படத்திற்காக தனது உடல் எடையை ஏற்றி இருக்கும் சில புகைப்படங்கள் வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விக்ரம். படத்தின் கதைக்கு ஏற்றார்போல் தனது உடல் எடையை ஏற்றி இறக்கி மிகவும் சிரமப்பட்டு நடிக்கும் நடிகர்களில் மிகவும் பிரபலமானவர் நடிகர் விக்ரம் என்றே கூறலாம்.

Vikram and Dhruv Vikram team up for Karthik Subbaraj's next ...

தற்போது தனது தந்தை போலவே தானும் படத்தின் கதைக்கு ஏற்றார்போல் தனது உடல் எடையை ஏற்றி மிகவும் வித்தியாசமான தோற்றத்துக்கு மாறியுள்ளார் விக்ரமின் மகன் துருவ் விக்ரம். 

தெலுங்கில் மாபெரும் வெற்றி பெற்ற அர்ஜுன் ரெட்டி திரைபடத்தின் தமிழ் ரீமேக்கான ஆதித்ய வர்மா படத்தில் நடித்ததன் மூலம் துருவ் விக்ரம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார். தற்போது கார்த்திக் சுப்பாராஜ் இயக்கவிருக்கும் அடுத்த படத்தில் துருவ் விக்ரம் நாயகனாக நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித்குமார் இந்த படத்தை தயாரிக்க உள்ளார்.


Advertisement