இவ்வளவு பெரிய பொண்ணு இருக்கா நடிகர் துல்கர் சல்மானுக்கு! மகளின் பிறந்தநாளை கொண்டாடிய புகைப்படங்கள் வைரல்..!



dulquer-salmaan-family-photos-goes-viral-maryam-birthda

தென்னிந்திய திரைப்பட உலகத்தில் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளவர் துல்கர் சல்மான். தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என மூன்று மொழிகளிலும் முன்னணி நடிகராக வலம் வருபவர், மலையாள சினிமாவின் பெரிய நட்சத்திரமான மம்முட்டியின் மகனாவும் ஆவார்.

2012ஆம் ஆண்டு வெளியான ‘செக்கண்ட் சோவ்’ திரைப்படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தைத் தொடங்கிய துல்கர், அதன் பிறகு தீவரம், பட்டம் போலே சலலாஹ் மொபிலஸ்,  வாயை மூடி பேசவும்,ஓகே கண்மணி,சீதா ராமம்,மற்றும் லக்கி பாஸ்கர் உள்ளிட்ட வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். அவரது நடிப்புக்கு தனியொரு ரசிகர் பட்டாளம் குறிப்பாக பெண்களிடையே அதிகமான வரவேற்பு உள்ளது.

அண்மையில் வெளியான லக்கி பாஸ்கர் திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றியை கண்டது. தற்போது துல்கர், I'm Game என்ற புதிய மலையாள திரைப்படத்தில் நடித்து வருகிறார். நஹஸ் ஹிதாயத் இயக்கும் இப்படம் சூதாட்டம் சார்ந்த கதைக்களத்துடன் உருவாகி வருகிறது என தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதையும் படிங்க: தாய்பாலில் மகனுக்கு தங்க நகையா! மகனுக்கு இந்திரஜா கொடுத்த அதிசய பரிசு! அது எப்படி செய்றாங்கனு காணொளியில் பாருங்க......

இந்நிலையில் துல்கர் சல்மான் தனது மனைவி அமல் சூபியா மற்றும் 8 வயது மகள் மரியம் அமீரா சல்மானுடன் எடுத்துக் கொண்ட சில அழகிய புகைப்படங்களை சமூகவலைதளங்களில் பகிர்ந்துள்ளார். மகளின் பிறந்த நாளையொட்டி வெளியான இந்த படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

 

இதையும் படிங்க: சுந்தரி கேப்ரியல்லாவிற்கு குழந்தை பிறந்தாச்சு.. அழகிய புகைப்படத்துடன் அவரே சொன்ன குட் நியூஸ்!!