தமிழகம் வீடியோ

பளார் என கன்னத்தில் அறைந்த நர்ஸ்! எகிறி தாக்கிய மருத்துவர்! களேபரமான மருத்துவமனை!! வைரலாகும் ஷாக் வீடியோ!!

Summary:

 உத்தரப்பிரதேச மாநிலம், ராம்பூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் பெண் செவிலியர் மற்றும் ம

 உத்தரப்பிரதேச மாநிலம், ராம்பூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் பெண் செவிலியர் மற்றும் மருத்துவர் இருவரும் ஒருவருக்கொருவர்  சரமாரியாக தாக்கி சண்டை போட்டு கொள்ளும் காட்சிகள் சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் பெருமளவில் பரவி வருகிறது. மேலும்  இதனால் மருத்துவமனையில் நோயாளிகளின் கூட்டமும் குவிந்து வருகிறது. இதனால் மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கமுடியாமல் மிகவும் திணறி வருகின்றனர். 

இந்த நிலையில் ராம்பூர் மாவட்ட அரசு மருத்துவமனையில்  பணியில் இருந்தபோது  மருத்துவர் மற்றும் செவிலியருக்கு இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்பொழுது மருத்துவர் தகாத வார்த்தையால் பேசியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஆத்திரமடைந்த செவிலியர் அவரது கன்னத்தில் அறைந்துள்ளார். 

இதனால் கோபமடைந்த மருத்துவர் திரும்ப அந்த பெண் செவிலியரை தாக்கியுள்ளார். இதனால் இருவருக்குமிடையே பெரும் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் அங்கிருந்தவர்கள் அவர்களை விலக்கியுள்ளனர்.  இந்த வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து நகர மாஜிஸ்திரேட் ராம்ஜி மிஸ்ரா கூறுகையில், சண்டையில் ஈடுபட்ட டாக்டர் மற்றும் செவிலியரிடம் தான் பேசினேன், இருவரும் பணிச்சுமை மற்றும் மன அழுத்தத்தில் இருந்ததாக கூறினர். இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தி வருகிறோம் என தெரிவித்துள்ளார்.


Advertisement