சினிமா

தியேட்டரிலும் இல்ல, ஓடிடியிலும் இல்ல.. டாக்டர் படக்குழு எடுத்த அதிரடி முடிவு! ஷாக்கான ரசிகர்கள்!!

Summary:

தமிழ் சினிமாவில் தொகுப்பாளராக இருந்து பின்னர் தனது திறமையால் முன்னேறி ஏராளமான திரைப்படங்கள

தமிழ் சினிமாவில் தொகுப்பாளராக இருந்து பின்னர் தனது திறமையால் முன்னேறி ஏராளமான திரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டாக்டர். இப்படத்தை கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார்.

இப்படத்தில் ஹீரோயினாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, வினய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படத்தை கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன், சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது.
இந்நிலையில் கொரோனாவால் டாக்டர் படம் ரிலீஸ் ஆகாமல் இருந்த நிலையில் நேரடியாக ஓடிடி-யில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளிவந்தது.

ஆனால் தற்போது அந்த படத்தை நேரடியாக தொலைக்காட்சியில் ரிலீஸ் செய்ய உள்ளதாகவும், அதன்படி படம் வருகிற நவம்பர் 4-ந் தேதி தீபாவளி பண்டிகையன்று டி.வி.யில் ஒளிபரப்பப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement