சினிமா

மை டியர் பேஷண்ட்.. ரவுடி பேபி பாடலை வச்சு செம்ம மாஸாக இந்த டாக்டர் செய்த வேலையை பார்த்தீர்களா! செம ஹிட்டான வீடியோ!!

Summary:

பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் மாரி 2. இந்தப் படத்தில் தனுஷ்

பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் மாரி 2. இந்தப் படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்திருந்தார். இப்படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான பாடல் ரவுடி பேபி. இந்த பாடல் பட்டி தொட்டியெல்லாம் பிரபலமாகி உலக அளவில் செம ஹிட்டானது.

இந்த நிலையில் ரவுடி பேபி பாடலை மாற்றியமைத்து பாடி இங்கிலாந்தைச் சேர்ந்த குடும்ப நல மருத்துவர் Dr.K.பாஸ்கர் பெருமளவில் பிரபலமாகியுள்ளார். தனது நோயாளிகளின் நலனை மனதில் கொண்டு அவர்களுக்கு புதுவிதமான அறிவுரைகள் வழங்குவது போன்ற பாடல் வரிகளை மாற்றியமைத்து அவர் பாடலை பாடியுள்ளார்.

அதாவது BP யை குறைக்க நோயாளிகளுக்கு அறிவுரை கூறுவது போன்று, ரொம்ப உப்பு போடக்கூடாது, எடை கூட கூடாது, மது மற்றும் புகை பிடித்தல் கூடாது, ரத்தம்,சிறுநீரகம், யுஜிசி டெஸ்ட் எடுங்கள், தூக்கம் இல்லையென்றால், டென்ஷனால் BP கூடும். எனவே உடற்பயிற்சி செய்து நீங்கள் மனது வைத்தால் Bp யை குறைக்கலாம் என அவர் அந்த பாடலில் அசத்தலாக பாடியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது


Advertisement