சினிமா

இயக்குனர் அட்லியின் அடுத்த படம் யாருடன் தெரியுமா? சற்று முன் வெளியான அதிர்ச்சி தகவல்!

Summary:

Do you know director Adli's next film? Slightly released shocking information!

தற்போது தமிழகத்தில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் இயக்குனர் அட்லியும் ஒருவர் ஆவார். இவர் எடுக்கும் படங்கள் அனைத்தும் இந்த சமுதாயத்தில் உள்ள பிரச்சனைகளை மையமாக கொண்டு எடுக்க படுகிறது.

அந்த வகையில் இயக்குனர் அட்லி இளைய தளபதி விஜயை வைத்து தெறி, மெர்சல் என பல அதிரடி படங்களை இயக்கியுள்ளார். அதிலும் குறிப்பாக இவர் இயக்கிய அந்த தெறி மற்றும் மெர்சல் என்னும் படங்கள் ஒரு மெகா ஹிட்டை கொடுத்தது. 

இந்த படங்களுக்கு அடுத்த படியாக இளைய தளபதி விஜய் " சர்கார் " என்னும் படத்தில் நடித்துள்ளார். மேலும் இந்த படம் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவான படமாகும். இந்த படமும் ஒரு மிக பெரிய வெற்றியை தரும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கின்றனர்.

மேலும் இந்த சர்க்கார் படம் கூடிய விரைவில் திரைக்கு வரும் நிலையில் உள்ளது. இந்த சூழ்நிலையில் சர்க்கார் படத்தினை தொடர்ந்து இளைய தளபதி விஜய்யின் கூட்டணியில் இயக்குனர் அட்லீ மீண்டும் இணைகிறார்.

இவர்களது கூட்டணியில் அமையும் இந்த படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது என தகவல் வெளியானது. தனியார் தொலைகாட்சிக்கு பேட்டி அளித்த போது இயக்குனர் அட்லி இது குறித்து கூறியுள்ளார்.

எங்களது  கூட்டணியில் இதற்கு முன் அமைந்த விஜயின் மாஸை விட இந்த படத்தில் இன்னும் டபுள் மடங்கு மாஸாக இருக்கும் என இயக்குனர் அட்லீ கூறியுள்ளார்.


Advertisement