சினிமா

விமர்சகர்களுக்கு நடிகர் விஷால் வேண்டுகோள் ..!! தயவுசெய்து இப்டி பண்ண வேண்டாம்...!

Summary:

do-not-review-the-movie

தற்போதைய நடிகர் மற்றும் நடிகர் சங்க தலைவரான நடிகர் விஷால் லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடித்து மெகா ஹிட் ஆன திரைப்படம் சண்டக்கோழி. இந்த படத்தில் கதாநாயகியாக மீரா ஜாஷ்மின் நடித்தார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் ராஜ்கிரண் நடித்தார். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்தார். மீண்டும் இந்த படத்தின் இரண்டாம் பாகம் எடுத்துக்கொண்டிருக்கின்றனர். இந்த பாகத்திலும் லிங்குசாமி-விஷால்-யுவன் கூட்டணியில் இந்த படம் படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கிறது. 

இந்த படத்தின் இசைவெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் பேசிய நடிகர் விஷால்  25 படங்களில் என்னுடன் சேர்ந்து பயணம் செய்த அனைவருக்கும் நன்றி. சண்டக்கோழி எனக்காக எழுதப்பட்ட கதையில்லை. விஜய் அல்லது சூர்யாவுக்காக எழுதப்பட்டது. இந்த மாதிரி ஒரு கதை இருப்பதாக எனக்கு தெரியவந்து நான் தான் லிங்குசாமியிடம் சென்று கேட்டேன். அவர் என்னை ஒரு அக்ஷன் ஹீரோவாக கொண்டு வந்து நிறுத்திவிட்டார். 24 படங்களை முடித்துவிட்டு 25-வது படத்தில் சண்டக்கோழி-2 படத்தில் நடித்திருக்கிறேன். கண்டிப்பாக இந்த படம் எனது வாழ்க்கையில் முக்கிய படமாக இருக்கும்.  சண்டக்கோழி-2 ஆயுதபூஜையை முன்னிட்டு அக்டோபர் 18-ஆம் தேதி வெளியாகும்.
கூடியவிரைவில் நான் படம் இயக்குகிறேனோ இல்லையோ, கீர்த்தி சுரேஷ் படம் இயக்குவார்.  தயாரிப்பாளர் சங்கம் சார்பாக ஒரே ஒரு வேண்டுகோளை மட்டும் வைக்க விரும்புகிறேன். எந்தவொரு படத்திற்கும் விமர்சனம் செய்யும்போது தயவுசெய்து மூன்று நாட்கள் கழித்து விமர்சனம் செய்யுங்கள். அப்பொழுது தான் படங்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெரும் என்றும் கூறினார். மேலும் நான் எல்லா விமர்சகர்களும் சொல்லவில்லை, குறிப்பிட்ட நபர்களை மட்டும் தான் சொல்கிறேன் என்றும் நடிகர் விஷால் கூறினார். 


Advertisement