சினிமா

கடந்த பத்து வருடங்களாக தீபாவளிக்கு வெளியான மாஸ் படங்கள் என்ன தெரியுமா? இதோ.

Summary:

Diwali flim

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் விஜயின் 63 வது படமாக உருவாகியுள்ள படம் தான் பிகில். மேலும் மாநகரம் புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான படம் தான் கைதி இவ்விரு படங்களும் இன்று திரையரங்கு முழுவதும் வெளியாகியுள்ளது.

மேலும் வெளியான படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் வசூல் ரீதியாகவும் பல்வேறு சாதனைகளை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இதற்கு முன்பு வெளியான அதாவது பத்து வருடங்களாக தீபாவளிக்கு வெளியான படங்களை என்ன என்பதை தற்போது காண்போம்.

அதன்படி கடந்த 2009-ஆம் ஆண்டு ஆதவன், பேராண்மை. 2010 ஆம் ஆண்டு உத்தமபுத்திரன், மைனா. 2011ஆம் ஆண்டு 7ஆம் அறிவு, காவலன். 2012 ஆம் ஆண்டு தூப்பாக்கி, போடா போடி. 2013 ஆம் ஆண்டு ஆரம்பம், பாண்டிய நாடு. 2014 ஆம் ஆண்டு கத்தி. 2015 ஆம் ஆண்டு வேதாளம், தூங்காவனம். 

2016 ஆம் ஆண்டு கொடி, காஷ்மோரா. 2017 ஆம் ஆண்டு மெர்சல், மேயாத மான். 2018 ஆம் ஆண்டு சர்கார். தற்போது 2019 ஆம் ஆண்டு பிகில், கைதி என கடந்த பத்து வருடங்களாக தீபாவளிக்கு மட்டும் 20 படங்கள் வெளியாகி உள்ளன. 


Advertisement