வாரணம் ஆயிரம் பட நடிகை காதலரை ரகசிய திருமணம் செய்துகொண்டாரா - வெளியான தகவல்!

வாரணம் ஆயிரம் பட நடிகை காதலரை ரகசிய திருமணம் செய்துகொண்டாரா - வெளியான தகவல்!


Diviya marriage her lover

தமிழில் நடிகர் சிம்பு நடித்த குத்து படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை ரம்யா. ஆனால் அவரது உண்மையான பெயர் திவ்யா ஸ்பந்தனா. அதன் பிறகு பொல்லாதவன், வாரணம் ஆயிரம் போன்ற மெகா ஹிட் படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் அதிகம் பிரபலமானார்.

கர்நாடக மாநிலம் மாண்டியாவில் பிறந்தவரான இவர் கடந்த 2013ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்து மாண்டியா நாடாளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். 

தற்போது கன்னட மீடியாக்கள் திவ்யா துபாயில் வாழும் ராபில் என்ற நபரை ரகசிய திருமணம் செய்து கொண்டதாக  வதந்தியை கிளப்பி உள்ளனர்.

ஆனால் திவ்யாவின் அம்மா இதை பற்றி கூறும் போது தன் மகள் இந்தியாவை விட்டு செல்ல விருப்பம் இல்லாமல் இருவரும் பிரிந்து விட்டதாக கூறியுள்ளார்.