சினிமா

கொரோனா பாதிப்பால் உயிரிழந்த பிரபல தயாரிப்பாளர்! சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!

தமிழ்த் திரையுலகின் முன்னணித் தயாரிப்பு நிறுவனமான லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர்களுள் ஒருவர் வி.சுவாமிநாதன். இந்த நிறுவனம் அரண்மனை காவலன், மிஸ்டர் மெட்ராஸ், கோகுலத்தில் சீதை, பகவதி, உன்னை நினைத்து, பிரியமுடன்,  உன்னைத்தேடி, அன்பே சிவம், தாஸ், சிலம்பாட்டம், புதுப்பேட்டை, சகலகலா வல்லவன் என  ஏராளமான படங்களை தயாரித்துள்ளது. 

மேலும் வி.சுவாமிநாதன் சில திரைப்படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் சுவாமிநாதன் சமீபத்தில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு,  சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வந்தார். 

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி 62 வயது நிறைந்த அவர் இன்று உயிரிழந்தார். சுவாமிநாதனின் இந்த மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும்  பலரும் அவரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


Advertisement