உலக நாயகனின் பிறந்தநாள்.! இந்தியன் 2 படக்குழு கொடுத்த அசத்தலான சர்ப்ரைஸ்! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!

உலக நாயகனின் பிறந்தநாள்.! இந்தியன் 2 படக்குழு கொடுத்த அசத்தலான சர்ப்ரைஸ்! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!



director-shankar-shares-indian-2-poster-for-kamal-birth

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்து வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த திரைப்படம் இந்தியன். மாபெரும் வெற்றியால் 25 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் பட இரண்டாம் பாகம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. சில காரணங்களால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இதன் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.

இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.  லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தியன் 2 படத்தில் சமுத்திரக்கனி, காஜல் அகர்வால், ராகுல் பிரீத் சிங், பாபி சிம்ஹா, சித்தார்த்,  பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலரும் முக்கிய ரோலில் நடிக்கின்றனர். இந்நிலையில் உலக நாயகன் கமல் தனது 68வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அதனை முன்னிட்டு அவருக்கு திரைப் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளனர்.

இந்த நிலையில் நடிகர் கமலுக்கு வாழ்த்து கூறி இந்தியன் 2 படக்குழு சார்பில் அசத்தலான போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதனை இயக்குனர் ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, நீங்கள் எங்களது பொக்கிஷம், பன்முக திறமை கொண்ட கமல்ஹாசன் சாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என கூறியுள்ளார். அது வைரலாகி வருகிறது.