தடையாக நின்ற உறவினர்கள்! நடிகை நயன்தாரா சினிமாவில் நடிக்க இந்த இயக்குனர்தான் காரணமா?? அவரே பகிர்ந்த தகவல்!!

தடையாக நின்ற உறவினர்கள்! நடிகை நயன்தாரா சினிமாவில் நடிக்க இந்த இயக்குனர்தான் காரணமா?? அவரே பகிர்ந்த தகவல்!!


Director sathyan anthikadu talk about nayanthara

தமிழ் சினிமாவில் தற்போது ரஜினி, விஜய், அஜித், சூர்யா உள்ளிட்ட பல பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகையாக, லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. இவருக்கென ஹீரோக்களுக்கு இணையாக ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. 

ஆனால் நயன்தாரா மலையாளத்தில் மனசினக்கரே என்ற படத்தில் தான் அறிமுகமானார். இந்தப்படத்தை பிரபல இயக்குனர் சத்யன் அந்திக்காடு இயக்கியிருந்தார். இந்நிலையில் அண்மையில் பேட்டி ஒன்றில் அவர் நடிகை நயன்தாராவை அறிமுகப்படுத்தியது குறித்து பேசியுள்ளார்.

nayanthara

அவர் கூறியதாவது, அந்த படத்திற்காக நான் புதுமுகம் ஒருவரை தேடிக்கொண்டிருந்தேன். அப்பொழுது பத்திரிகை ஒன்றில் நகை விளம்பரத்தில் நயன்தாராவின் புகைப்படத்தை பார்த்தேன். அதன் பிறகு அவரை தொடர்புகொண்டு இந்த படத்தில் நடிக்க அழைத்தேன். ஆனால் ஆரம்பத்தில் ஒப்புக்கொண்ட அவர் பின்னர் உறவினர்களால் கிளம்பிய எதிர்ப்பால் பின்வாங்கினார்.

ஆனால் நயன்தாராவின் பெற்றோர் சினிமாவில் நடிப்பதற்கு எந்தவித மறுப்பும் சொல்லாததால், நயன்தாராவை உற்சாகமூட்டி இப்படத்தில் நடிக்க வைத்தேன். பின் டயானா என்ற பெயரை மாற்றி சினிமாவுக்காக நயன்தாரா என பெயர் சூட்டினேன் என்று பழைய நினைவுகளை அவர் பகிர்ந்துள்ளார்.