சினிமா

10 வருடங்கள் கழித்து மீண்டும் சினிமாவிற்கு வரும் பிரபலம்! யார் தெரியுமா?

Summary:

Director saran return back to movie direction

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் தல அஜித். தற்போது சிவா இயக்கத்தில் விசுவாசம் படத்தில் நடித்துள்ளார் அஜித். படத்தின் ட்ரைலர் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பாப்பெறும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் வரும் பொங்கலுக்கு அதாவது ஜனவரி 10 ஆம் தேதி விசுவாசம் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நடிகர் அஜித்துக்கு பல மெகா ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் ஒருவர் 10 வருடம் கழித்து தற்போது மீண்டும் சினிமா துறைக்குள் காலடி எடுத்து வைத்துள்ளார். பத்து வருடங்களாக திரையுலகை விட்டே ஒதுங்கியிருந்த இயக்குநர் சரண் மீண்டும் படம் இயக்கத்துவங்கியுள்ளார். இதை பிக் பாஸ் ஆரவ் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.

அஜீத்தை வைத்து காதல் மன்னன், அமர்க்களம், அசல், அட்டகாசம் ஆகிய நான்கு படங்களை இயக்கியவர் சரண். வசூல்ராஜாவுக்குப் பின்னர் கடன் சுமைகளுக்கு ஆளாகி, மெல்ல சினிமாவை விட்டு ஒதுங்கினார்.

இந்நிலையில் மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ் என்ற படத்துடம் மீண்டும் களம் இறங்குகிறார். இதில் ஆரவ் மார்க்கெட் ராஜாவாக டான் கதாபாத்திரத்தில் வருகிறார். ராதிகா சரத்குமார், நாசர், யோகி பாபு, சாயாஜி ஷிண்டே, சாம்ஸ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement