அஜித், விஜய் நான் ஒரு பெரிய நடிகரா.. சர்ச்சை ஏற்படுத்திய இயக்குனர் ராஜகுமாரின் பேட்டி.?



Director raj kumaran controversial interview about vijay and ajith

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களை இயக்கி அறியப்படும் இயக்குனராக இருப்பவர் ராஜகுமாரன். இவர் முன்னணி நடிகையான தேவயானியை திருமணம் செய்து கொண்டிருக்கிறார். பார்த்திபன் மற்றும் தேவயானி நடிப்பில் வெளியான 'நீ வருவாய் என' திரைப்படத்தில் உதவி இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

Ajith

இப்படத்திற்கு பின்பு விண்ணுக்கும் மண்ணுக்கும், காதலுடன், திருமதி தமிழ் போன்ற திரைப்படங்களில் இயக்குனராக பணிபுரிந்துள்ளார். மேலும் நடிகராக பூவே உனக்காக, சூரிய வம்சம், திருமதி தமிழ், வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், கடுகு போன்ற திரைப்படங்கள் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.

தற்போது சமூக வலைத்தளமான யூ ட்யுபில் ஒரு பேட்டியில் கலந்து கொண்டுள்ளார் ராஜ்குமார். அப்பேட்டியில் முன்னணி நடிகர்களை குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தும் விதமாக பேசியிருக்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் பரவி வருகிறது.

Ajith

அவர் கூறியதாவது, "விஜய், அஜித், விக்ரம் இவர்களெல்லாம் ஒரு பெரிய நடிகர்களா? எல்லாரையும் விட சரத்குமார் சார் தான் நல்ல நடிகர் அவர் அளவிற்கு யாராலும் நடிக்க முடியாது. விஜய் நடிப்பில் வெளியான 'வாரிசு' திரைப்படத்தில் கூட சரத்குமார் தான் கதாநாயகன் அளவிற்கு நடித்திருந்தார். விஜய் நடிப்பெல்லாம் ஒண்ணுமே இல்லை" என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறார்.