சினிமா

அடேங்கப்பா.. ஜெயம் ரவியின் அண்ணன் இயக்குனர் மோகன் ராஜாவிற்கு இவ்வளவு பெரிய பிள்ளைகளா.!வைரலாகும் கியூட் பேமிலி புகைப்படம்!!

Summary:

அடேங்கப்பா.. ஜெயம் ரவியின் அண்ணன் இயக்குனர் மோகன் ராஜாவிற்கு இவ்வளவு பெரிய பிள்ளைகளா.!வைரலாகும் கியூட் பேமிலி புகைப்படம்!!

தமிழ் திரையுலகில் பிரபல இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் மோகன் ராஜா. இவர் கடந்த 2001ஆம் ஆண்டு ஹனுமன் ஜங்ஷன் என்ற தெலுங்கு படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அவரது முதல் படமே பெரும் வெற்றியடைந்தது. அதனைத் தொடர்ந்து அவர் தமிழில் தனது தம்பி ரவியை வைத்து ‘ஜெயம்’ என்ற படத்தை இயக்கினார்.

இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று செம ஹிட்டானது. ஜெயம் ரவியும் பெருமளவில் பிரபலமானார். பின்னர் இயக்குனர் மோகன்  M.குமரன் S/O மகாலக்ஷ்மி, உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்ரமணியம், தில்லாலங்கடி, தனி ஒருவன் உள்ளிட்ட பல ஹிட் படங்களை இயக்கியுள்ளார். மேலும் விஜய்யின் வேலாயுதம், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த வேலைக்காரன் போன்ற திரைப்படத்தையும் அவர் இயக்கியுள்ளார். 

இந்நிலையில் மோகன்ராஜா அண்மையில் தனது பிறந்தநாளை எனது குடும்பத்தினருடன் செம மகிழ்ச்சியாக கொண்டாடியுள்ளார். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படத்தை சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்த நிலையில் அது வைரலாகி லைக்ஸ்களைக் குவித்து வருகிறது. மேலும் மோகன் ராஜாவிற்கு இவ்வளவு பெரிய மகன் மகளா?என நெட்டிசன்கள் ஷாக்காகியுள்ளனர்.


Advertisement