"ரஜினியை மனதில் வைத்து தான் இந்த படத்தின் கதையை எழுதினேன்" பிரபல இயக்குனரின் நேர்காணல்..

"ரஜினியை மனதில் வைத்து தான் இந்த படத்தின் கதையை எழுதினேன்" பிரபல இயக்குனரின் நேர்காணல்..


director-karthik-suburaj-talking-about-rajini

2012ம் ஆண்டு "பீட்சா" திரைப்படத்தின் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்புராஜ். தொடர்ந்து ஜிகர்தண்டா, பென்ச் டாக்கீஸ், இறைவி, புத்தம் புது காலை, ஜகமே தந்திரம் உள்ளிட்ட பல படங்களை இயக்கி ரசிகர்களின் மனதில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார்.

Kollywood

ஜிகர்தண்டா முதல் பாகம் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை ராகவா லாரன்ஸ், எஸ். ஜே சூர்யா வைத்து இயக்கியுள்ளார். ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி எதிர்பார்ப்பை கிளறியுள்ளது.

படம் வரும் நவம்பர் 12ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் பிரமோஷனுக்கான பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட கார்த்திக் சுப்புராஜ், "இப்படத்தின் மையக்கருவே தமிழ் சினிமாவின் முதல் கருப்பு ஹீரோ என்பது தான்.

Kollywood

இப்படம் அபூர்வ ராகங்கள் வெளியான 1975 காலகட்டங்களில் தான் பயணிக்கும். நானும், லாரன்ஸ் மாஸ்டரும் ரஜினி சாரின் வெறித்தனமான ரசிகர்கள். ரஜினி சாரை வைத்து இயக்க வாய்ப்பு கிடைத்தால் முள்ளும் மலரும் மாதிரி ஒரு படம் எடுக்க வேண்டும்" என்று கார்த்திக் சுப்புராஜ் கூறியுள்ளார்.