"ரஜினி படத்திலிருந்து விலகிய இயக்குனர்!" "அதே தலைப்பில் வேறு கதையில் நடித்த ரஜினி!"
ரஜினியின் ஆரம்பகாலத்தில் இளையராஜா அவரை வைத்து ஒரு படம் தயாரிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு ரஜினியிடம் கேட்டுள்ளார். அப்போது ரஜினிக்கும், இளையராஜாவுக்கும் நல்ல நெருங்கிய நட்பு இருந்த சமயம் என்பதால், ரஜினியும் அவரிடம் ஓகே சொல்லியுள்ளார்.
முதலில் ஒரு புதுமுக இயக்குனர் தான் கதையை சொல்லி படத்திற்கு "ராஜாதி ராஜா" என்று பெயரையும் வைத்துள்ளார். ஆனால் வேறு சில காரணங்களால் அவர் விலகிவிடவே, பின்னர் அந்த டைட்டிலுக்கு வேறு கதையுடன் ஒரு இயக்குனரை இளையராஜா தேடியுள்ளார்.
ஏற்கனவே ரஜினியை வைத்து "அம்மன் கோவில் கிழக்காலே" படத்தை இயக்க நினைத்த இயக்குனர் சுந்தர்ராஜன், இளையராஜாவிடம் கூறிய கதை ரஜினிக்கும், இளையராஜாவுக்கும் பிடித்ததால், அவரையே இயக்க சொன்னாராம் ரஜினி.
இதையடுத்து இளையராஜாவின் சகோதரர் ஆர். டி. பாஸ்கரின் பாவலர் கிரியேஷன்ஸ் தயாரிப்பில், பஞ்சு அருணாச்சலம் திரைக்கதை எழுத, இளையராஜா இசையில் வணிக ரீதியில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது "ராஜாதி ராஜா" திரைப்படம்.